தீபாவளி என்றால் என்ன?

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?


அசுரர் என்பது காரணப் பெயரே.

சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.

ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.


இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர்.

அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க தமிழர்களையே குறிக்கிறது.

அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர்.

இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும்மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளைஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்றுசொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமானபற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம்தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும்.வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ்மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள்தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியைகொண்டாடுவதை நிறுத்த வேண்டும்..

Comments

Popular posts from this blog

ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம்

ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

உவமைத்தொடர் உவமை (parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விடயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது. ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம். பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை,தொழில் ஒப்புமை, பயன்ஒப்புமை ஆகியவை காரணமாகஉவமை அமையும். ஆகவே அடிப்படையில் பண்பு உவமை, தொழில்உவமை,பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும். உவமைக்கு சில உதாரணங்கள் அச்சாணியற்ற தேர் போல - உயிர் நாடியற்றது. அத்தி பூத்தது போல - மிக அரிதாக ஆண்டிகள் மடம் கட்டியது போல - உருவாகாத திட்டம் ஆற்றில் கரைத்த புளி போல - பயனற்ற செயல் கீரியும் பாம்பும் போல - பகை உயிரும் உடம்பும் போல - ஒற்றுமை கரடி பிறை கண்டது போல - மிக அரிது உள்ளீடற்ற புதர் போல - போலி அடியற்ற மரம் போல - மூலபலமற்றது. கடன்பட்டார் நெஞ்சம் போல - பதைபதைப்பு கண்ணுக்கு இமை போல - பாதுகாப்பு குரங்கின் கை பூமாலை போல - தகுதியில்லாதவர்களுக்கு வழங்குதல் எலியும் பூனையும் போல - சன்டை சூரியனை கண்ட பனி போல - மறைதல் செத்து செத்து எழும் பீனிக்சு போல - அழியாது வலையில் அகப்பட்ட மான் போல - துடித்தல் நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல - திக்கு தெரியாமல் தடுமாறுதல் வேலியே பயிரை மேய்ந்தது போல - பாதுகாக்க வேண்டியதே பாதிப்பாய் அமைதல் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல - பிரயோசனமின்மை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் - இரண்டு மனம் கொண்டவன் வெண்ணெய் இருக்க நெய்க்கு அழைவதுபோல - அறிவற்ற தன்மை விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி தாமரை அலை தண்ணீர் போல - பற்றற்றது உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி சிப்பிக்குள் முத்து போல - மேன்மை இன்று மழர்ந்த தாமரை போல - சிரித்த முகம் உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு நகமும் சதையும் போல - ஒற்றுமை நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை கிணற்றுத் தவளை போல - உலகை அறியாமை வெந்த புண்ணில் வேல் பாயடச்சியது போல - துன்பத்திற்கு மேல் துன்பம்