Posts

Showing posts from May, 2018

Delete செய்த Browsing History யை திரும்ப பார்ப்பது எப்படி?How to view clear Browsing History

Image

How to use your mobile like a pc with Windows 7 operating system

Image

humko hame se malayalam nice

Image

How to apply passport in Tamil

Image

Please don't see

https://youtu.be/CvrrQb51OT0

How to change audhar mobile number and name in tamil

Image

TN RTO Codes, Names, Address, Phone Numbers and Pin Code

TN01 RTO Chennai ( Central ) MTC Building, Ayanavaram, Chennai 600023  044 - 26745959 TN02 RTO Chennai ( North West ) PL No. 3623, G17, Anna Nagar, New Avadi Road, Chennai 600040 044 - ­ 26215969 TN03 RTO Chennai ( North East ), No.147, Balakrishna Street, Tondiarpet T. H. Road, Chennai 600081 044 - 25911133 TN04 RTO Chennai ( East ) Power Mill Road, Basin Bridge, Pulianthoppu, Chennai 600012 044 - ­ 26670993 TN05 RTO Chennai ( North ) No.10, A/4, Ist Cross Road, MKB Nagar Vysarbadi, Chennai 600012 044 - ­ 26732525 TN06 RTO Chennai ( South East ) Triplicane (At Mandaveli), 17, R.K. Nagar, 3rd Cross Street Mandaveli, Chennai 600028 044 - ­ 24610405 TN07 RTO Chennai ( South ) Thiruvalluvar Nagar, East Coast RD, Thiruvanmiyur Chennai 600041 044 - ­ 24450404 TN09 RTO Chennai ( West ) 1, Bharathidasan Colony, Mambalam Taluk, Office Complex, K.K. Nagar, Chennai 600078 044 - 24894466 TN10 RTO Chennai ( South West ) 315 Kamarajar Salai, ...

enaku piditha padal

Image

இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன அவற்றின் பெயர் மற்றும் தலை நகரங்கள் பின்வருமாறு: தமிழ்நாடு - சென்னை கேரளம் - திருவனந்தபுரம் ஆந்திரப் பிரதேசம் - ஹைதராபாத் தெலுங்கானா - ஹைதராபாத் கர்நாடகம் - பெங்களுரு கோவா - பனாஜி மகாராஷ்டிரா - மும்பை சத்தீஸ்கர் - ராய்பூர் ஓடிசா - போவனேஷ்வர் மத்திய பிரதேசம் - போபால் குஜராத் - காந்தி நகர் ராஜஸ்தான் - ஜெய்ப்பூர் பஞ்சாப் - சண்டிகர் ஹரியானா - சண்டிகர் ஹிமாச்சல பிரதேசம் - சிம்லா ஜம்மு & காஷ்மீர் - ஸ்ரீநகர்(கோடைகாலத்தில்), ஜம்மு(குளிர்காலத்தில்) உத்தரகாண்ட் - டேராடுன் உத்திர பிரதேசம் - லக்னோ ஜார்கண்ட் - ராஞ்சி மேற்கு வங்காளம் - கொல்கத்தா பீகார் - பாட்னா சிக்கிம் - காங்டாக் அஸ்ஸாம் - திஸ்பூர் அருணாச்சல பிரதேசம் - இட்டாநகர் நாகலாந்து - கோஹிமா மணிப்பூர் - இம்பால் மிசோரம் - ஐய்ஸ்வால் மேகாலயா - ஷில்லாங் திரிபுரா - அகர்தலா யூனியன் பிரதேசங்கள் டில்லி (தேசிய தலைநகரம்) - டில்லி அந்தமான் நிக்கோபார் - போர்ட் பிளேயர் சண்டிகர் - சண்டிகர் தாத்ரா நகர் ஹவேலி - சில்வாஸா டாமன் டையூ - டாமன் லட்சத்தீவுகள் - கவரட்டி புதுச்சேரி - புதுச்சேரி and

உலக மொழிகளின் பட்டியல் உலக மொழிகள் உயிருள்ள மொழிகளின் எண்ணிக்கை : 6912 இவற்றுள் இறக்கும் தறுவாயிலுள்ள மொழிகள் : 516 உலகில் அதிகூடிய மக்கள் பேசும் மொழி : மன்டாரின் சைனீஸ் அதிக மொழிகள் பேசப்படும் நாடு : பப்புவா நியூ கினியா (820 வாழும் மொழிகள்) அதிக சொற்களை கொண்ட மொழி : ஆங்கிலம் (250,000) குறைந்த சொற்களை கொண்ட மொழி : ரகி ரகி ( Taki Taki ) (340 சொற்கள்) அதிக மக்கள் பேசும் மொழிகள் என்று வகைப்படுத்தும் போது எங்கள் தமிழ் மொழி 16,17 இடத்தில் காணப்படுகின்றது. மயூரேசன் அச்சப்படுவது போன்று தமிழுக்கு அழிவு ஒருபோதும் வராது என்று நாமும் நம்புவோம்.

ஆண்களின் 7 பருவங்கள்: ஆண்களின் 7 பருவங்கள் ⇒ பாலன் <7 மீளி 8-10 மறவோன் 11-14 திறவோன் 15 விடலை 16 காளை 17-30 முது மகன் >30

ஐவகை ஒழுக்கம் ஐவகை ஒழுக்கம் ⇒ கொல்லாமை களவு செய்யாமை காமவெறியின்மை பொய்யாமை கள்ளுண்ணாமை

கொடுந்தமிழ் சொற்கள் அத ⇒ அதை ஆ ஆச்சு ⇒ ஆயிற்று முடிந்தது இ இதெஎவ்வளவு ⇒ இது எவ்வளவு இன்னா ⇒ என்ன இவரு ⇒ இவர் எ எங்க ⇒ எங்கே என்னோட ⇒ என்னுடன் எல்லாத்துக்கும் ⇒ அனைத்துக்கும் ஒ ஒங்க ⇒ உங்கள் க காப்பாத்துங்க ⇒ காப்பாற்றுங்கள் கால ⇒ காலை கொடுத்துடுவாரு ⇒ கொடுத்து விடுவார் கொள்ளுங்க ⇒ கொள்ளுங்கள் ச சொன்னாங்க ⇒ சொன்னார்கள் சொல்லுங்க ⇒ சொல்லுங்கள் சொல்லுவீங்க ⇒ சொல்லுவீர்கள் த தமிழ்ழ ⇒ தமிழில் தெரிஞ்சா ⇒ தெரிந்தால் ந நில்லு ⇒ நில் நீங்க ⇒ நீங்கள் ப புரியல ⇒ புரியவில்லை பேசுங்க ⇒ பேசுங்கள் பேசுவீங்களா ⇒ பேசுவீர்களா பேர் ⇒ பெயர் போயிட்டு ⇒ போய் விட்டு ம மன்னிக்கணும் ⇒ மன்னிக்க வேண்டும் மன்னிச்சிடுங்க ⇒ மன்னிக்க வேண்டும் மால ⇒ மாலை மெதுவா ⇒ மெதுவாக ர ராவு ⇒ இரவு ரொம்ப ⇒ மிகவும்

fish அகலை அடல் அடுக்குப்பல் சுறா அடுப்பு பொறுவா அதவாழன் திருக்கை அத்வாணி திருக்கை அனுவ மீன் அப்பைக்கொவ்வை அமீனீ உளுவை அம்பட்டன் கத்தி அம்பட்டன்கத்தி அம்பட்டன்வாளை அம்புட்டன் வாழ அயிரை அவிரி அவிலி ஆக்கணாங்கெளிறு ஆட்கான்டி ஆனதும்பி ஆனைக்கற்றலை ஆற்றுல்லம் இறால் ஈர்க்கிறால் உடுப்பாத்தி ஊசிக் கணவாய் ஊமைக்கிளாத்தி கணவாய் மீன் கறி மீன் காணாங்கெளுத்தி மீன் கிளாத்தி கிளி முக்கு மீன் கீச்சான் கீச்சான் கீரிமீன் சாளை கீரை மீன் கும்டுல் கெண்டை மீன் கெலங்கா மீன் கெளுத்தி மீன் கொடுவா மீன் கொடுவாய் மீன் கோர சுறா கோர சுறா கோரோவா கோரோவா கோலா கோலா கோலா மீன் சங்கரா மீன் சாலை மீன் சிங்கி இறால் சிவப்பு மீன் சீப்பு திரட்டை சீலா மீன் சுறா மீன் சூடை மீன் சூரை மீன் திருக்கை மீன் தீரா மீன் தேரா மீன் நாவர மீன் நெத்திலி மீன் பசிந்தி பண்ணா மீன் பன்னா மீன் பாரை மீன் பால் சுறா பேய்ச் சாலை போதா மீன் போத்தா மீன வஞ்சரம் மீன் வஞ்சிரம் மீன் வாலை மீன் வாளை மீன் வாவல் விறால் மீன் விலாங்கு மீன் வெள்ளி அரிஞ்சான் வெள்ளை அரிஞ்சான் வௌவால் மீன்

அக்காக்குருவி ⇒ எளிதில் பார்க்க முடியாததாக,குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை அடைக்கலங்குருவி ⇒ ஊர்க்குருவி அண்டங்காக்கை ⇒ மிகக் கருப்பாக இருக்கும் பெரிய காகம் ஓர்காக்கை அன்னம் ⇒ சோறு அன்றில் ⇒ மூலநக்ஷத்திரம் அரசவால் ஈப்பிடிப்பான் ⇒ asian paradise flycatcher அறிவாள் மூக்கன் ⇒ glossy ibis ஆ ஆட்காட்டி ⇒ ஆள்காட்டுகின்றவன் சுட்டுவிரல் சாலையில் ஒரு வழிகாட்டு பலகை ஆந்தை ⇒ இரவில் இரை தேடும் பெரிய கண்களையும் தட்டையான முகத்தையும் கொண்ட பறவை ஆலா ⇒ தலை வயிறு ஆகியவை வெண்மையாகவும் இறக்கைகள் சாம்பல் நிறத்திலும் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு வகைக் கழுகு இ இசைக்குரற்கருவி ⇒ குயில் இராப்பாடி ⇒ nightingale இராப்பாடிக்குருவி ⇒ பாடுங் குருவி வகை இருவாய்க்குருவி ⇒ இருவாய்ச்சி உ உண்ணிக்கொக்கு ⇒ கால்நடைகளைப் பின் தொடர்ந்து சென்று பூச்சிகள் மற்றும் உண்ணிகளை உண்ணும், மஞ்சள் நிற அலகும் வெள்ளை நிற உடலும் கொண்ட ஒரு வகைக் கொக்கு உள்ளான் ⇒ sandpiper (common) உவணம் ⇒ கருடன் கழுகு உயர்ச்சி ஊ ஊதாத் தேன்சிட்டு ⇒ purple sunburd ஊதாப் பிட்டு தேன்சிட்டு ⇒ purple rumped sunbird ஊர்க்குருவி ⇒ அடைக்கலங்குருவி எ எழுத்தாணிக்குருவி ⇒ மரங்கொத்தி க கடற்புறா ⇒ கடலின் வாழ்புறா. கட்டுக்காடை ⇒ நீர்ப்பறவை வகை கரண்டிவாயன் ⇒ eurasian spoonbill கரிச்சான் ⇒ கரிச்சால்,கருங்குருவி. கருங்காடை ⇒ button quail கருநாரை ⇒ ஒருகொக்கு. கருப்பு வயிற்று ஆலா ⇒ black-bellied tern கரும்புறா ⇒ turtle dove கருவால் வாத்து ⇒ gadwall களகண்டம் ⇒ குயில் காகம் ⇒ காக்கா கருமை காக்கை ⇒ காகம் = காக்காய் = காக்கா காடை ⇒ quail காட்டு நெட்டைக்காலி ⇒ olive-backed pipit காட்டுள்ளான் ⇒ Wood snipe காளகண்டம் ⇒ குயில் கின்னகம் ⇒ தூக்கணங்குருவி கிளி ⇒ Parrot கிளுவை ⇒ teal (common) குயில் ⇒ Cuckoo Koel கூழைக்கடா ⇒ Pelican கொக்கு ⇒ நாரை கொடிக்கால் வாலாட்டி ⇒ forest wagtail கொண்டலாத்தி ⇒ hoopoe, having a beautiful crest erected at will கொண்டை நீர்க்காகம் ⇒ indian shag கொண்டைக்கரிச்சான் ⇒ உச்சிச்சூட்டுள்ள கரிக் குருவிவகை கோழி ⇒ முட்டைக்ககவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு பறவையினம் ச சக்கிலிக்குருவி ⇒ மீன்கொத்தி சாம்பல் கதிர்குருவி ⇒ ashy prinia சாம்பல் கூழைக்கடா ⇒ grey pelican சாம்பல் வாலாட்டி ⇒ grey wagtail சிகப்பு இறக்கை வானம்பாடி ⇒ red-winged bush-lark சிச்சிரம் ⇒ மீன்கொத்தி சிட்டுக்குருவி ⇒ Sparrow சின்ன நீர்க்காகம் ⇒ little corporant சின்ன வானம்பாடி ⇒ eastern skylark சின்ன வெள்ளைக்கொக்கு ⇒ little egret சின்னக் காணான்கோழி ⇒ little crake சிறால் மீன்கொத்தி ⇒ small blue kingfisher சிவப்பு மூக்கு ஆள்காட்டி ⇒ red-wattled lapwing சிவப்புக் காணான்கோழி ⇒ ruddy-breasted crake சூறைக்குருவி ⇒ சோள வயலிற்கூட்டங்கூட்டமாகக் காணப்படும் குருவிவகை செம்மார்புக் கூக்குருவான் ⇒ coppersmith barbet சேவல் ⇒ Cock Rooster சோலக்குருவி ⇒ rosy starling த தகைவிலாங்குருவி ⇒ தலையிலாக்குருவி தகைவிலான் குருவிவகை தகைவிலான் குருவி ⇒ swallow தச்சன்குருவி ⇒ மரங்கொத்தி தரையில்லாக்குருவி ⇒ தலையிலாக்குருவி தலையிலாக்குருவி ⇒ தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை தாழைக் கோழி ⇒ moorhen (common) தீக்கோழி ⇒ Ostrich துடுப்புவாயன் ⇒ Spoonbill தூக்கணங்குருவி ⇒ தூக்கணம் + குருவி. தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை தூக்கனாங்குருவி ⇒ baya weaver தூதுணம் ⇒ தூக்கணங்குருவி தைத்திரம் ⇒ மீன்கொத்தி தையல்சிட்டு ⇒ tailorbird தைலாங்குருவி ⇒ தலையிலாக்குருவி ந நரையான் ⇒ மீன்கொத்தி நாமக் கோழி ⇒ coot (common) நீலச்சிறகு வாத்து ⇒ gargany நீலத் தாழைக் கோழி ⇒ purple moorhen நீலவால் இலைக்கோழி ⇒ phesant-tailed jacana நெருப்புக்கோழி ⇒ ostrich ப பச்சைக் கதிர்குருவி ⇒ greenish leaf warbler பஞ்சது ⇒ குயில் பட்டாணி உப்புக்கொத்தி ⇒ little-ringed plover பனிப்பாடி ⇒ penguin பன்றிக்குருவி ⇒ White-headed babbler பருந்து ⇒ Kite பழுப்புக் கீச்சான் ⇒ brown shrike பாட்டாணி ⇒ கொண்டலாத்தி பாப்பாத்திக் கழுகு ⇒ egyptian vulture பாற்குருவி ⇒ Indian Roller, Indian jay பிகம் ⇒ குயில் பிளித் நாணல் கதிர்குருவி ⇒ blyth's reed warbler பீக்குருவி ⇒ பன்றிக்குருவி புறா ⇒ Dove Pigeon புள்ளி ஆந்தை ⇒ spotted owlette புள்ளிச் சில்லை ⇒ spotted munia புள்ளிப் புறா ⇒ spotted dove புள்ளியலகு குழைக்கடா ⇒ spotbilled pelican புழுக்கொத்தி ⇒ கொண்டலாத்தி பூணில் ⇒ The seven sisters பூனைப் பருந்து ⇒ pallid harrier பெரிய நெட்டைக்காலி ⇒ great cormorant பெருங்கொடை ⇒ கொண்டலாத்தி பேரலகு மீன்கொத்தி ⇒ stork-billed kingfisher பைரி ⇒ peregrine falcon பொன்னாந்தட்டான் ⇒ நெஞ்சிடத்தே மஞ்சணிறம் வாய்ந்த ஒருவகைக் குருவி பொன்முதுகு மரங்கொத்தி ⇒ lesser goldenbacked woodpecker பொன்வாய்ப்புள் ⇒ மீன்கொத்தி ம மஞ்சட்குருவி ⇒ Turmeric bulbul மஞ்சள் மூக்கு ஆள்காட்டி ⇒ yellow-wattled lapwing மஞ்சள் மூக்கு நாரை ⇒ painted stork மஞ்சள் வாலாட்டி ⇒ citrine wagtail மயில் ⇒ Peacock மரங்கொத்தி ⇒ மரத்தில் வேலை செய்பவன் மலைப்போர்வை ⇒ black vulture மாங்குயில் ⇒ eurasian golden oriole மாடப் புறா ⇒ blue-rock pigeon மாடுபிடுங்கி ⇒ asian white-backed vulture மைனா ⇒ Mynah வ வண்ணாத்திக்குருவி ⇒ Washerwoman robin வராலடிப்பான் ⇒ osprey வலாசகம் ⇒ குயில் வாத்து ⇒ Duck வானம்பாடி ⇒ Skylark வான்கோழி ⇒ Turkey வாற்கொண்டலாத்தி ⇒ Paradise fly-catcher வாலாட்டிக்குருவி ⇒ Red wagtail வால் காகம் ⇒ indian treepie விசிறிக்குருவி ⇒ விசிறிபோன்ற வாலுடைய குருவிவகை வீட்டுச் சிட்டுக்குருவி ⇒ passer domesticus வெண்கழுத்து நாரை ⇒ white-necked stork வெண்முதுகுச் சில்லை ⇒ white-rumped munia வெள்ளை அறிவாள் மூக்கன் ⇒ oriental white ibis வெள்ளை வாலாட்டி ⇒ white wagtail வெள்ளைப் பூனைப்பருந்து ⇒ pied harrier

பழங்களின் பெயர்கள் Terms Meaning / Definition அ அத்திப்பழம் ⇒ Apricot Fig அன்னதாழை ⇒ அன்னாசி. அன்னமுன்னாப் பழம் ⇒ சீத்தாப்பழம் அரத்திப்பழம் ⇒ apple அரபுக் கொடிமுந்திரி ⇒ hanepoot அரபுக் கொடிமுந்திரி ⇒ muscat grape அவுரிநெல்லி ⇒ ஒருவகை சிறியப் பழமாகும். அவுரிநெல்லி அமெரிக்காவிலும் , மேற்கு ஆசியாவிலும் அதிகமாக விளைகிறது. அவுரிநெல்லி இனிப்புச் சுவையும் , காடித்(Acidic) தன்மையும் கொண்டது. ஆ ஆசினி ⇒ ஈரப் பலாமரம் வானம் ஆரஞ்சு ⇒ கிச்சிலி ஒரு வகை பழம் ஆல்பக்கோடா ⇒ plum இ இலந்தைப்பழம் ⇒ an Indian apple ஈ ஈச்சம் பழம் ⇒ சிறு சிவப்பு நிறப் பழம் இது வறல் நிலக்காடுகளில் காணப்படும் உ உலர் கொடிமுந்திரி ⇒ raisin உலர்த்தியப் பழம் ⇒ prune ஊ ஊமத்தை ⇒ datura metel Datra alba nees Thorn apple எ எலுமிச்சை ⇒ எலும்பிச்சை சீதளை க கடரநாரத்தை ⇒ citrus medica கடார முருகல் ⇒ mangosteen கடாரநாரத்தை ⇒ citron கமலாப்பழம் ⇒ citrus reticulata கமலாப்பழம் ⇒ orange (loose jacket) கருந்திராட்சை ⇒ black currant காக்காய் கொல்லி ⇒ Fish berry காட்டுவாழை ⇒ கல்வாழை கிச்சிலகிழங்கு ⇒ Round white Zeodary கிச்சிலிப்பழம் ⇒ citrus aurantium குமட்டிப்பழம் ⇒ watermelon குருதிநெல்லி ⇒ cranberry குறுந்தக்காளி ⇒ tamarillo குழிப்பேரி ⇒ peach கெச்சி ⇒ bitter watermelon கெச்சி ⇒ cucumus trigonus கொடித்தோடைப்பழம் ⇒ passionfruit கொடிமுந்திரி ⇒ grape கொய்யாப்பழம் ⇒ guava கொவ்வை ⇒ a climbing plant with beautiful red fruit ச சம்புராகப் பழம் ⇒ rose apple சர்க்கரை பாதாமி ⇒ apricot சாத்துக்குடி ⇒ Sweetlime Sweet orange சாத்துக்கொடி ⇒ citrus sinensis சாத்துக்கொடி ⇒ orange (sweet) சிறுநாவல் ⇒ eugenia rubicunda சீதாப்பழம் ⇒ Custard Apple சீத்தாப் பழம் ⇒ Annona squamosa custard apple சீத்தாப்பழம் ⇒ custard apple சீத்தாப்பழம் ⇒ sweet sop சீமைப் பனிச்சை ⇒ persimmon சீமைப்பலா ⇒ breadfruit சீமைமாதுளை ⇒ quince சீமையிலுப்பை ⇒ chickoo சீமையிலுப்பை ⇒ sapodilla செங்கடுக்காய் ⇒ செந்நிறமுள்ள கடுக்காய்வகை. (பதார்த்த.972.) செந்தாழை ⇒ செதில்கள் போன்ற சொர சொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம். செந்தாழை என்பது அன்னாசிப்பழத்தின் தூயதமிழாகும். செந்திராட்சை ⇒ red currant செம்புற்றுப்பழம் ⇒ strawberry செவ்வாழைப்பழம் ⇒ red banana சேலாப்பழம் ⇒ cherry ட டுரியான் பழம் ⇒ Durian த தமரதம் ⇒ Chinese goose berry தர்ப்பூசணி ⇒ Watermelon திராட்சை ⇒ Grapes திராட்சைப்பழம் ⇒ கொடிமுந்திரி தேனரந்தம்பழம் ⇒ tangerine தோடைப்பழம் ⇒ orange ந நமரைவாழை ⇒ வாழைவகை நாகப்பழம் ⇒ blackberry நாரத்தை ⇒ citrus aurantifolia நார்த்தம்பழம் ⇒ Lemon நாவல்பழம் ⇒ jambu fruit நித்தியக்கல்யாணி ⇒ பட்டிப்பூ நெல்லிக்காய் ⇒ gooseberry ப பசலிப்பழம் ⇒ kiwi பஞ்சலிப்பழம் ⇒ bell fruit பப்பாளிப் பழம் ⇒ papaya பம்பரமாசு ⇒ grapefruit பம்பரமாசு ⇒ pomelo பலா ⇒ Jackfruit பலாப்பழம் ⇒ jackfruit புற்றுப்பழம் ⇒ raspberry புளிச்சிக்காய் ⇒ Starfruit புளியதளை ⇒ A ball made of the pulp of tamarind fruit பேயத்தி ⇒ devil fig பேரிக்காய் ⇒ Pear பேரீச்சம் ⇒ Dates fruit பேரீச்சை ⇒ ஒரு பழம் பேரீட்சம்பழம் ⇒ பேரீச்சை ம மஞ்சள் முலாம்பழம் ⇒ cantaloupe மாங்காய் ⇒ Mango மாதுளம் பழம் ⇒ Pomogranate மாம்பழம் ⇒ Mango முசுக்கட்டைப்பழம் ⇒ mulberry முந்திரிப்பழம் ⇒ cashewfruit முரட்டுத் தோடை ⇒ ugli fruit முள்நாரிப்பழம் ⇒ durian வ வாழை ⇒ Plantain வாழைப்பழம் ⇒ banana விளச்சிப்பழம் ⇒ lychee விளாம்பழம் ⇒ wood apple விளிம்பிப்பழம் ⇒ carambola விளிம்பிப்பழம் ⇒ star-fruit வெண்ணைப் பழம் ⇒ avocado வெள்ளரிப்பழம் ⇒ melon

தமிழின் தாக்கம் திராவிட மொழிகளில் மிகப் பழைய செவ்வியல் மொழியாகிய தமிழ் மொழியில் உள்ள எண்குறிகள் மற்ற திராவிட மொழிக்குடும்ப எண்குறிகளின்பால் தாக்கம் விளைவித்து அவற்றின் வடிவத்தை வடிவமைத்துள்ளது. கீழுள்ள அட்டவணை முதன்மையான தென்னிந்திய/திராவிட மொழிகளை ஒப்பிடுகிறது. எண் தமிழ் கன்னடம் மலையாளம் துளு தெலுங்கு கோலமி கூர்க் பிராகுயி தொல்-திராவிடம் 1 ஒன்று ஒண்டு ஒண்ணு ஒஞ்சி ஒகட்டி ஒக்கோடு ஒண்ட அசித் *ஒரு(1) 2 இரண்டு எரடு ரண்டு ராடு ரெண்டு இராட் இண்டின் இராட் *இரு(2) 3 மூன்று மூரு மூன்னு மூ(ஞ்)சி மூடு மூண்டின் மூண்ட்(உ) முசித் *முச் (மூ) 4 நாலு, நான்கு நால்கு நாலு நால் nālugu நாலின் நாலுகு சார் (II) *நான் (நால்) 5 ஐந்து ஐது அஞ்சு அய்ண் (ஐந்) அயிது அய்த் 3 பஞ்செ (II) பான்யே (பானே) (II) *சய்ந் 6 ஆறு ஆறு ஆறு ஆஜிi ஆறு ஆர் 3 சொய்யே (II) ஸஸ் (II) *சாறு 7 ஏழு ஏளு ஏளுகு (ஏடு) யேல் ஏடு ஏட்(உ) 3 சத்தே (II) ஹாஃப்த் (II) *ஏளு (ஏழ்) 8 எட்டு எண்டு எட்டு எட்ம எனிமிதி எனுமதி 3 அத்தே (II) ஹஸ்த் (II) *எட்டு 9 ஒன்பது ஒம்பது ஒன்பது ஒர்ம்ப தொம்மிதி தொம்தி 3 நைம்யே (II) நோஹ் (II) *தொல் 10 பத்து ஹத்து பத்து பத்த் பதி பதி 3 தசே (II) தஹ் (II) *பத்(து) மேலும் தமிழ் , பல்லவ எழுத்து ஊடாகவும் அதில் இருந்துப் பின்னர் கவி எழுத்து ஊடாகவும் கேமர் எழுத்து ஊடாகவும் பிற தென்கிழக்கு ஆசிய எழுத்துகளூடாகவும் பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய வரைவன்களை/எண்குறிகளை வடிவமைத்துள்ளது.

க ன்னியாகுமரி உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன் , என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூத ாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக் கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன்தீவு"என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்". ஏழு தெங்கநாடு, ஏழுமதுரைநாடு ஏழுமுன்பலைநாடு, ஏழுபின் பலைநாடு,ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரைநாடு ஏழுகுரும்பனை நாடு என நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது . இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம், மாபுராணம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் "ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாறு ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங் கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்

Image

உவமைத்தொடர் உவமை (parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விடயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது. ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம். பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை,தொழில் ஒப்புமை, பயன்ஒப்புமை ஆகியவை காரணமாகஉவமை அமையும். ஆகவே அடிப்படையில் பண்பு உவமை, தொழில்உவமை,பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும். உவமைக்கு சில உதாரணங்கள் அச்சாணியற்ற தேர் போல - உயிர் நாடியற்றது. அத்தி பூத்தது போல - மிக அரிதாக ஆண்டிகள் மடம் கட்டியது போல - உருவாகாத திட்டம் ஆற்றில் கரைத்த புளி போல - பயனற்ற செயல் கீரியும் பாம்பும் போல - பகை உயிரும் உடம்பும் போல - ஒற்றுமை கரடி பிறை கண்டது போல - மிக அரிது உள்ளீடற்ற புதர் போல - போலி அடியற்ற மரம் போல - மூலபலமற்றது. கடன்பட்டார் நெஞ்சம் போல - பதைபதைப்பு கண்ணுக்கு இமை போல - பாதுகாப்பு குரங்கின் கை பூமாலை போல - தகுதியில்லாதவர்களுக்கு வழங்குதல் எலியும் பூனையும் போல - சன்டை சூரியனை கண்ட பனி போல - மறைதல் செத்து செத்து எழும் பீனிக்சு போல - அழியாது வலையில் அகப்பட்ட மான் போல - துடித்தல் நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல - திக்கு தெரியாமல் தடுமாறுதல் வேலியே பயிரை மேய்ந்தது போல - பாதுகாக்க வேண்டியதே பாதிப்பாய் அமைதல் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல - பிரயோசனமின்மை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் - இரண்டு மனம் கொண்டவன் வெண்ணெய் இருக்க நெய்க்கு அழைவதுபோல - அறிவற்ற தன்மை விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி தாமரை அலை தண்ணீர் போல - பற்றற்றது உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி சிப்பிக்குள் முத்து போல - மேன்மை இன்று மழர்ந்த தாமரை போல - சிரித்த முகம் உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு நகமும் சதையும் போல - ஒற்றுமை நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை கிணற்றுத் தவளை போல - உலகை அறியாமை வெந்த புண்ணில் வேல் பாயடச்சியது போல - துன்பத்திற்கு மேல் துன்பம்

ர, ற பொருள் வேறுபாடு ர, ற பொருள் வேறுபாடு அர - பாம்பு அற - தெளிய, முற்றுமாக அரவு - பாம்பு அறவு - அறுதல், தொலைதல் அரம் - ஒரு கருவி அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம் அரி - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன் அறி - அறிந்துகொள் அரிய - கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான அறிய - அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள அரன் - சிவன் அறன் - தர்மம், அறக்கடவுள் அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று. 18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்) அறிவை - அறிவாய் அருகு - புல்வகை (அருகம்புல்), அண்மை அறுகு - குறைந்து போதல் அக்கரை - அந்தக் கரை அக்கறை - ஈடுபாடு அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம் அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை அரைதல் - தேய்தல் அறைதல் - அடித்தல், சொல்லுதல் அப்புரம் - அந்தப் பக்கம் அப்புறம் - பிறகு அர்ப்பணம் - உரித்தாக்குதல் அற்பணம் - காணிக்கை செலுத்துதல் அரு - உருவமற்றது அறு - துண்டித்துவிடு, அறுத்துவிடு அருமை - சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது அறுமை - நிலையின்மை, ஆறு ஆரு - குடம், நண்டு ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை ஆர - நிறைய, அனுபவிக்க ஆற - சூடு ஆற (குறைய) ஆரல் - ஒருவகை மீன் ஆறல் - சூடு குறைதல் இரத்தல் - யாசித்தல் இறத்தல் - இறந்துபோதல், சாதல் இரகு - சூரியன் இறகு - சிறகு இரக்கம் - கருணை இறக்கம் - சரிவு, மரணம் இரங்கு - கருணைகாட்டு இறங்கு - கீழிறங்கி வா இரவம் - இரவு இறவம் - இறால் மீன் இரவி - சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில் இறவி - இறத்தல் இரவு - இரவு நேரம், யாசித்தல் இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம் இரை -ஒலி, உணவு இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை இரு - இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள் இறு - ஒடி, கெடு, சொல்லு இரும்பு - கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம் இறும்பு - வண்டு, சிறுமலை இருப்பு - கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல் இறுப்பு - வடிப்பு இருத்தல் - அமர்ந்திருத்தல், காத்திருத்தல் இறுத்தல் - வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல் இருக்கு - மந்திரம், ரிக் வேதம் இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு இரைத்தல் - ஒலித்தல், மூச்சுவாங்குதல் இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம் உறவு - நட்பு, சுற்றம், எறும்பு உரவோர் - அறிஞர், முனிவர் உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர் உரி - தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி உறி - உறிவெண்ணெய், தூக்கு உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை உறு - மிகுதி உருக்குதல் - இளக்குதல், மெலியச் செய்தல் உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல் உரை - புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல் உறை - இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை உரைப்பு - தங்குதல், தோய்தல் உறைப்பு - காரம், கொடுமை உரையல் - சொல்லல் உறையல் - மாறுபாடு, பிணக்கு உரிய - உரிமையான உறிய - உறிஞ்ச ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை ஊறல் - தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு ஊரு - அச்சம், தொடை ஊறு - இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை எரி - தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம் எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல் ஏர - ஓர் உவமஉருபு ஏற - மிகுதி, உயர (ஏறுதல்) ஏரி - நீர்நிலை, குளம் ஏறி - உயர்ந்த, மேலே ஏறி ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு ஒறு - தண்டி, அழி, இகழ் ஒருத்தல் - ஆண் விலங்குகளின் பொதுப்பெயர் ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல் ஒருவு - நீங்கு ஒறுவு - வருத்தம், துன்பம் கரடு - மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது கறடு - தரமற்ற முத்து கரம் - கிரணம், விஷம், செயல், கை, கழுதை கறம் - கொடுமை, வன்செய்கை கரவு - பொய், வஞ்சனை, மறைவு கறவு - கப்பம் கரவை - கம்மாளர் கருவி கறவை - பாற்பசு கரி - அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை கறி - இறைச்சி, மிளகு கரத்தல் - மறைத்தல் கறத்தல் - கவர்தல், பால் கறத்தல் கருத்து - எண்ணம் கறுத்து - கருநிறங்கொண்டு கரு - சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை கறு - சினம், வைராக்கியம், கோபம், அகங்காரம் கருப்பு - பஞ்சம் கறுப்பு - கருநிறம், பேய், கோபம், குற்றம், கறை கரை - எல்லை, தடுப்பு, ஓரம் கறை - அழுக்கு, குற்றம், ரத்தம் கரையான் - மீனவன் கறையான் - செல் (ஓர் உயிரி) கர்ப்பம் - கருவுறுதல், உள், சினை கற்பம் - கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திர சாஸ்திரம், 432 கோடி, மூப்பு நீக்கும் மருந்து கர்ப்பூரம் - சூடம், பொன், மருந்து, கூடம் கற்பூரம் - பொன்னாங்கண்ணி காரி - கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனி, விஷம், ஒரு வள்ளல், வாசுதேவன் காறி - காறிஉமிழும் கழிவு காரு - வண்ணான், தேவதச்சன் காறு - காறுதல் (காறி உமிழ்), அளவு காரை - ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை காறை - ஒரு கழுத்தணி கீரி - ஓர் உயிரினம் கீறி - பிளந்து, அரிந்து குரங்கு - ஒரு விலங்கு குறங்கு - தொடை, கொக்கி குரவர் - கடவுள், குரு, பெரியோர், அரசர் குறவர் - ஒரு ஜாதியினர் குரவை - கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி குறவை - ஒருவகை மீன் குரத்தி - தலைவி, குருவின் மனைவி குறத்தி - குறத்தி ஜாதிப் பெண் குருகு - பறவை, குட்டி, கொக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை குறுகு - அண்மைப்படுத்து குருகினம் - பறவை இனம் குறுகினம் - நெருங்கினோம் குரை - சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை குறை - குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை குரு - ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம் குறு - குறுகு கூரல் - ஒரு மீன், பறவை இறகு கூறல் - சொல்லுதல், விற்றல் கூரை - சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில் கூறை - புது ஆடை, சீலை கூரிய - கூர்மையான கூறிய - சொன்ன கூர - குளிர்ச்சி மிக கூற - சொல்ல, வேண்டல் கோரல் - கூறுதல் கோறல் - கொல்லல் கோரை - புல்வகை கோறை - குவளை, பொந்து கோரல் - சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம் கோறல் - குளிர் காற்று, மழை சிரை - சிரைத்தல், முடிநீக்கல் சிறை - சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை சீரிய -​ சினந்த,​​ சிறந்த,​​ சீராய்​ சீறிய -​ சினந்த​ சுரா​ -​ கள்​ சுறா​ -​ சுறா மீன்​ சூரல்​ -​ மூங்​கில்,​​ பிரம்பு​ சூறல்​ -​ தோண்​டல்​ சுருக்கு​ -​ வலை,​​ சுருக்​கம்,​​ கட்டு,​​ பூமாலை,​​ வகை,​​ குறைவு,​​ நெய்த்​து​டுப்பு​ சுறுக்கு​ -​ விரைவு​ செரு​ -​ போர்,​​ ஊடல்​ செறு​ -​ வயல்,​​ பாத்தி,​​ குளம்​ செரு​நர்​ -​ பகை​வர்,​​ படை​வீ​ரர்​ செறு​நர்​ -​ பகை​வர்​ சொரி​ -​ தினவு,​​ அரிப்பு,​​ பொழி​ சொறி -​ சிரங்கு,​​ சொறி​தல்​ தரித்​தல்​ -​ அணி​தல்,​​ பொறுத்​தல்,​​ தங்​கல்,​​ தாம​தித்​தல்,​​ தாங்​கு​தல்​ தறித்​தல் -​ வெட்​டு​தல்​ தரி​ -​ அணி,​​ அணிந்​து​கொள்​ தறி -​ தூண்,​​ ஆப்பு,​​ நெசவு இயந்​தி​ரம்,​​ முளைக்​கோல்​ தரு​தல் -​ கொடுத்​தல்​ தறு​தல்​ -​ இறு​கக்​கட்​டு​தல்​ தாரு​ -​ மரம்,​​ தேவ​தாரு,​​ பித்​தளை​ தாறு​ -​ குலை,​​ அங்​கு​சம்,​​ முள்,​​ இரும்பு,​​ முள்​கோல்​ திரம்​ -​ மலை,​​ உறுதி,​​ நிலை,​​ பூமி​ திறம்​ -​ உறுதி,​​ நரம்​புள்ள வீணை,​ கூறு​பாடு,​​ சுற்​றம்,​​ குலம்,​​ பக்​கம்,​​ வல்​லமை,​​ ஒழுக்​கம்,​​ மேன்மை, வர​லாறு,​​ கார​ணம்​ திரை​ -​ அலை,​​ கடல்,​​ திரைச்​சீலை​ திறை​ -​ கப்​பம்​ துரவு​ -​ கிணறு​ துறவு​ -​ துறத்​தல்,​​ துற​வ​றம்​ துரை​ -​ பெரி​யோன்,​​ தலை​வன்​ துறை​ -​ நீர்த்​துறை,​​ வழி,​​ இடம்,​​ நூல்,​​ கடற்​கரை,​​ உபா​யம்,​​ பாவி​னம்​ துரு​ -​ களிம்பு​ துறு​ -​ கூட்​டம்,​​ நெருக்​கம்​ தூரல்​ -​ தூரு​தல்,​​ வருத்​தம்​ தூறல்​ -​ மழைத்​துளி,​​ பழி சொல்​லு​தல்​ தூரன்​ -​ குலத்​தின் பெயர்​ தூறன்​ -​ மூர்க்​கன்​ துரு​ -​ வீதி​ துதறு​ -​ அழி​ தேரார்​ -​ கல்​லா​த​வர்,​​ கீழ்​மக்​கள்,​​ பகை​வர்​ தேறார்​ -​ அறி​வி​லார்,​​ பகை​வர் தேரி - மணல் திட்டை, மணல் குன்று தேறி - தேர்ச்சி பெற்று, தெளிந்து நரை - நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை நறை - தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம் நாரி - பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன், நாறி - கற்றாழை நிருத்தம் - கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை நிறுத்தம் - நிறுத்தும் இடம் நிரை - பசு, ஒழுங்கு, வரிசை நிறை - கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு நூரல் - அவிதல், பதங்கெடுதல் நூறல் - அவித்தல் நேரி - அமுக்கு, நசுக்கு, அழுத்து நேறி - வழி, கோயில், கற்பு பரட்டை - பரட்டைத்தலை பறட்டை - செழிப்பற்றது பரதி - கூத்தாடுபவன் பறதி - அவசரம், பறத்தல் பரத்தல் - அலமறுதல், மிகுதல் பறத்தல் - பறந்துசெல்லல் பரம்பு - வயலை சமப்படுத்தும் பலகை பறம்பு - பாரியின் மலை பரல் - விதை, பருக்கைக்கல் பறல் - பறவை பரவை - கடல், ஆடல், பரப்பு பறவை - பறப்பவை, ஒரு நோய் பரி- குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி பறி - பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு,ஓலைப்பாய் பரித்தல் - காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல், பறித்தல் - பிடுங்குதல் பரிவு - அன்பு, துன்பம், இரக்கம் பறிவு - கழிவு, அதிர்தல் பருகு - குடி, அருந்து பறுகு - பறட்டை, அன்பு, பக்குவம் பரை - சிவசக்தி பறை - இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல் பாரை - கடப்பாரை பாறை - கற்பாறை பிரை - உறைமோர், பயன் பிறை - பிறைச்சந்திரன் பீரு - புருவம்,அச்சமுள்ளோன் பீறு - கிழிவு புரம் - மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம் புறம் - இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி,பின்புறம், முதுகு புரவு - கொடை, நிலம், செழுமை, காத்தல்,அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம் புறவு - காடு, புறா, பெருக்கல் - நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல்,மிகுவித்தல் பெறுக்கல் - அரிசி, மிகுத்தல் பொரி - நெற்பொரி, பொரிதல் பொறி - தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு பொரித்தல் - வறுத்தல், குஞ்சு பொரித்தல் பொறித்தல் - எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல் பொருப்பு - மலை, பக்கமலை பொறுப்பு - பாரம், பொறுமை பொரு - போர் பொறு - பொறுத்திரு மரத்தல் - விறைத்தல் மறத்தல் - மறதி, நினைவின்மை மரம் - தாவர வகை, மூலிகை, மரக்கலம்,பறைவகை மறம் - வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம். மரி - விலங்குகளின் குட்டி மறி - தடை செய் மரித்தல் - இறத்தல், சாதல் மறித்தல் - தடுத்தல்,திரும்புதல், அழித்தல். மரை - மான் மறை - வேதம் (எ.கா:- அறம் பொருள், இன்பம் வீடு என்கிற நால் வேதங்கள்) மரு - மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து. மறு - குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம் மருப்பு - கொம்பு, யானைத் தந்தம், யாழ்த்தண்டு. மறுப்பு - எதிர்ப்பு மருகு - வாசனை தாவரம் மறுகு - சிறியதெரு மாரன் - மன்மதன், காமன் மாறன் - பாண்டியன், சடகோபாழ்வார் முரி - பாலைநிலம், நொய், சிதைவு. முறி - ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு முருக்குதல் - அழித்தல், உருக்குதல். முறுக்குதல் - சுழற்றுதல், திரித்தல். வரம் - இறைவன் கொடுப்பது, வேண்டும் பொருள், தெய்வ ஈகை, மேன்மை, விருப்பம். வறம் - வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை. வரவு - வருமானம், வழி வறவு - கஞ்சி வரப்பு - எல்லை, வரம்பு வறப்பு - வறட்சி, வறுமை, வற்றுதல் விரகு - விவேகம், உபாயம், உற்சாகம், புத்தி, கபடம். விறகு - எரிகட்டை விரலி - மஞ்சள் விறலி - மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடும் பெண், 16 வயதினள். விரல் - மனித உடலில் உள்ள உறுப்பு விறல் - பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி. விராய் - விறகு விறாய் - செருக்கு, இறுமாப்பு வெரு - அச்சம் வெறு - வெறுத்துவிடு வெரல் - மூங்கில் வெறல் - வெல்லுதல், வெற்றி கொள்ளல் விரை - விரைந்துசெல் விறை - மரத்துப்போ

ல, ழ, ள பொருள் வேறுபாடு ல, ழ, ள பொருள் வேறுபாடு அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை அழகு - வனப்பு அளகு - சேவல், பெண்கூகை அலகம் - திப்பிலி அளகம் - வெள்ளெருக்கு, நீர் அலகை - கற்றாழை, பேய் அளகை - அளகாபுரி, பெண் அழம் - பிணம் அலம் - கலப்பை அளம் - உப்பு அலத்தல் - அலட்டல், அலைதல் அளத்தல் - அளவிடுதல், மதித்தல் அலவன் - ஆண்நண்டு அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன் அழி - அழித்துவிடு அலி - பேடி, காகம், விருச்சிகராசி அளி - கருணை, கள், வண்டு அல்லல் - துன்பம் அள்ளல் - வாரி எடுத்தல் அழை - கூப்பிடு அலை - கடல், நீரலை, அலைதல் அளை - தயிர், நண்டு, புற்று அவல் - பள்ளம், உணவுப் பொருள் அவள் - பெண் (சேய்மைச்சுட்டு) அல் - இரவு அள் - அள்ளி எடு, நெருக்கம் உலவு - நட உளவு - ஒற்று உழவு - கலப்பையால் உழுதல் உழி - இடம், பொழுது உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று உலு - தானியப் பதர் உழு - நிலத்தை உழு உளு - உளுத்துப் போதல் உலை - கொல்லன் உலை, நீருலை உழை - பாடுபடு, பக்கம், கலைமான் உளை - பிடரி மயிர், சேறு, தலை உழுவை - புலி உளுவை - மீன்வகை எல் - கல், மாலை, சூரியன் எள் - எண்ணெய்வித்து, நிந்தை எலு - கரடி எழு - எழுந்திரு, தூண் ஒலி - சப்தம், நாதம், காற்று ஒழி - அழி, தவிர், கொல், துற ஒளி - வெளிச்சம், மறை(த்துவை) ஒல் - ஒலிக்குறிப்பு ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி கலகம் - போர், அமளி, இரைச்சல் கழகம் - சங்கம், கூட்டமைப்பு கழங்கம் - கழங்கு, விளையாட்டுக் கருவி களங்கம் - குற்றம், அழுக்கு கலி - கலியுகம், பாவகை, சனி கழி - கோல், மிகுதி, உப்பளம் களி - மகிழ்வு, இன்பம் கலை - ஆண்மான், சந்திரன், கல்வி கழை - மூங்கில், கரும்பு, புனர்பூசம் களை - அழகு, புல் பூண்டு, அயர்வு கல் - மலை, பாறை, சிறுகல் கள் - மது, தேன் கலம் - கப்பல், பாத்திரம் களம் - இடம், போர்க்களம், இருள் காலி - ஒன்றுமில்லாதது, வெற்றிடம் காளி - துர்க்கை, மாயை காழி - சீர்காழி (ஊர்) காலை - பொழுது, விடியற்பொழுது காளை - காளைமாடு, இளைஞன் காலம் - பொழுது, நேரம் காளம் - எட்டிமரம், சூலம் கிலி - அச்சம், பயம் கிழி - கிழித்துவிடு, முடிப்பு (பொன்) கிளி - பறவை, வெட்டுக்கிளி கிழவி - முதியவள், மூதாட்டி கிளவி - சொல், மொழி குலி - மனைவி குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு குளி -நீராடு குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம், குடி குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி குலை - கொத்து, மனம் தடுமாறுதல் குழை - குண்டலம், குழைந்துபோதல் குலவி - மகிழ்ந்திருத்தல் குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல் குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி குலிகம் -சிவப்பு, இலுப்பை குளிகம் -மருந்து, மாத்திரை குவலை -துளசி, கஞ்சா குவளை - குவளை மலர், சொம்பு, ஒரு பேரெண் கூலம் - தானியம், கடைத்தெரு கூளம் - குப்பை கூலி - ஊதியம் கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர் கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல் கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல் கொளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய் கொலை - கொல்லுதல் கொளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம் கொல்லாமை - கொலை செய்யாமை கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை கொள்ளி - கொள்ளிக்கட்டை கொல்லை - புழக்கடை, தரிசுநிலம் கொள்ளை - திருடுதல், மிகுதி கோலம் - அழகு, அலங்காரம் கோளம் - உருண்டை, வட்டம் கோலை - மிளகு கோழை - வீரமற்றவன், கபம் கோளை - குவளை, எலி கோல் - மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு கோள் - கிரகம் கோலி - இலந்தை, விளையாடும் குண்டு கோழி - உறையூர், விட்டில், பறவை கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம் சலம் - நீர், சிறுநீர், குளிர் சளம் - பொய், துன்பம், வஞ்சனை சாலை - பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம் சாளை - கடல்மீன் சாழை - குடிசை, குச்சு சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல் சுளித்தல் - முறித்தல், சினத்தல் சூலை - வயிற்று நோய் சூளை - செங்கல் சூளை சூல் - கர்ப்பம் சூழ் - சூழ்ந்துகொள், சுற்று சூள் - சபதம் சேல் - மீன் சேள் - மேலிடம் சோலி - ரவிக்கை, காரியம் சோழி - பலகரை சோளி - கூடைவகை தவளை - ஓர் உயிரி தவலை - பாத்திரம் தலம் - இடம், பூமி தழம் - தைலம் தளம் - மேடை, மாடி வீட்டின் அடுக்கு தழை - தாவர உறுப்பு தலை - மண்டை தளை - விலங்கு தாலம் - உலகம், தேன் தாளம் - இசைக்கருவி, ஜதி தாலி - மங்கலநாண் தாழி - கடல், குடம், பரணி பெரியபாண்டம் தாளி - தாளித்தல், பனைதால் - நாக்கு, தாலாட்டு தாழ் - தாழ்தல், குனிதல் தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம். துலக்கம் - ஒளி, தெளிவு துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி துலம் - கோரை, கனம் துளம் - மாதுளை, மயிலிறகு துலி - பெண் ஆமை துழி - பள்ளம் துளி - மழைத்துளி, திவலை, சிறிய அளவு துலை - ஒப்பு, கனம் துளை - துவாரம், வாயில் தூலி - எழுதுகோல், எழுத்தாணி தூளி - புழுதி, குதிரை தெழித்தல் - கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல் தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல், விதைத்தல் தெல் - அஞ்சுதல் தெள் - தெளிவான தோலன் - அற்பன் தோழன் - நண்பன் தோலி - பிசின், ஒருவகை மீன் தோழி - பாங்கி, நட்பால் நெருக்கமானவள் தோளி - அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு தோல் - சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி தோள் - புயம், வீரம் நலன் - நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம், நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன் நலி - நோய் நளி - குளிர்ச்சி, பெருமை நலிதல் - நலிந்துபோதல், தோற்றல் நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல் நல் - நல்ல நள் - இரவு, நடு, நள்ளிரவு நாலம் - பூவின் காம்பு நாழம் - இழிவுரை, வசவு நாளம் - பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம் நாலி - முத்து, கந்தை ஆடை நாழி - உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி நாளி - கல், நாய் நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து நாழிகை - வட்டம், கடிகாரம் நால் - நான்கு நாழ் - குற்றம், செருக்கு நாள் - காலம், திதி நீலம் - ஒரு நிறம், கருங்குவளை, இருள் நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம் நீல் - நீலம், காற்று நீள் - நீளம், ஒளி பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை பழம் - கனி, முதுமை பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம் பலி - பலியிடுதல், பலியுயிர் பழி - குற்றம் பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு பாழ் - வீண், வெறுமை பீழை - துன்பம் பீளை - கண் அழுக்கு புலி - காட்டு விலங்கு புளி - புளியமரம், புளியங்காய் புலை - புலால், ஊன், கீழ்மை புழை - துளை, வாயில், நரகம் புகல் - அடைக்கலம் புகழ் - பெருமை புல் - அற்பம், கலவி, புல்பூண்டு புள் - பறவை பூலம் - புற்கட்டு பூளம் - பூவரசு பூழை - துவாரம், கோபுரவாயில் பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம் பாழி - கொடுத்தல், ஈதல் பாளி - வரப்பு, எல்லை பாலிவு - அழகு, நிறைவு பாழிவு - பொழிதல், மேன்மை போலி - பொய், வஞ்சகம், ஒப்பு போளி - இனிப்புப் பண்டம் பொலிதல் - செழித்தல், மங்கலமாதல் பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல், பெய்தல், நிறைதல் மலம் - அழுக்கு, பாவம் மழம் - இளமை, குழந்தை மலை - குன்று, பொருப்பு, வெற்பு,சிகரம் மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம் மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல் மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல் மல்லிகை - மாலை, கழுத்தணி, வரிசை மாளிகை - அரண்மனை, கோயில் மாலை - அந்திப்பொழுது, பூமாலை மாழை - மயக்கம், இளமை, அழகு மாளை - புளியம்பட்டை மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம் மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு) முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு முழை - குகை முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில் முழி - விழி (விழித்தல்) முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம் மூலி - மூலிகை, மரம், வேருள்ளது மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம் மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம் மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி) மெல்ல - மென்று தின்பது மெள்ள - மெதுவாக மாலி - மொளலி கிரீடம் மாழி - மேழி, கலப்பை மாளி - துணிமூட்டை வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி வளம் - வளமை, அழகு வலவன் - திருமால் வளவன் - சோழன், வேளாளன் வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன் வளன் - செழுமை, வளப்பன் வழப்பம் - வழக்கம், இயல்பு வளப்பம் - வளமை, செழிப்பு வலி - நோய், வலிமை, துன்பம் வழி - நெறி, பாதை, தடம், உபாயம் வளி - காற்று வலை - மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி வழை - சுரபுன்னை, புதுமை, இளமை வளை - கை வளையல், எலி வளை வல் - வலிமை, விரைவு, திறமை வள் - ஒலிக்குறிப்புச் சொல் வல்லம் - வாழை, ஓர் ஊர் வள்ளம் - மரக்கலம், படகு, அளவு, தொன்னை வல்லி - பூமி, பெண், பிரிதல், படர் கொடி வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன் வலு - வலிமை, பலம், பற்று வழு - குற்றம், தவறு, பழிப்புரை, கேடு வளு - இளமை, இளைய வாலி - கிஷ்கிந்தை அரசன் (இராமாயணம்) வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்) வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி வாலை - இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி வாழை - வாழைமரம் வாளை - வாளை மீன் வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு வாழ் - வாழ்வாயாக (என்று வாழ்த்துதல்) வாள் - போர்வாள், நீண்டகத்தி விலா - விலா எலும்பு விழா - திருவிழா, கொண்டாட்டம் விளா - இளமை, வெண்மை, நிணம் விழி - கண், கருவிழி விளி - கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று விலை - மதிப்பு, விலைக்கு விற்றல் விழை - விரும்பு, ஆசைப்படு விளை - ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்) விலக்கு - விலக்கி விடு, தவிர் விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம் விலங்கு - பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம் விளங்கு - திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை) வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு வேலம் - வேலமரம், தோட்டம் வேழம் - யானை, கரும்பு, மூங்கில் வேல் - வேலாயுதம் வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை வேலை - பணி, கடல் வேளை - பொழுது, நேரம், ஒருவகைக் கீரை

(1)அகிலம் -பூமி (2) அமர்தல் - இருத்தல் (3) அடவி - காடு (4) அரமியம் - நிலாமுற்றம் (5) அரமியம் - ,உட்பரிகை (6) அனல் -நெருப்பு (7) அப்பா-தந்தை (8) அம்மா-தாய் (9) அஃகம் - தானியம் (10) அகங்காரம் - செருக்கு (11)அகதி - கதியற்றவன் (12)அகதி - கதியிலி (13)அகம் - மனம் (14)அகம் - மனை (15)அகம்பாவம் - செருக்கு (16)அகரமுதலி - அகராதி (17)அகரு - அகில் (18)அகலம் - விரிவு (19)அகலல் - நீக்கல் (20)அகல் - தகழி (21)அகவை - வயது (22)அகழ் - அகழி (23) அகிலம் - உலகம் (24)அக்கச்சி - அக்கா (25)அக்கம் - துலாக்கோல் (26)அக்கறை - சிரத்தை (27) அக்கறை - கருத்து (28)அக்கறை - விருப்பு (29)அக்கறை - அவசியம் (30)அக்கிரமம் -அநீதி (31)அக்கினி - நெருப்பு (32)அங்கதம் - மார்பு (33)அங்கதம் - வசைப்பாட்டு (34)அங்கத்துவம் - உறுப்புரிமை (35)அங்கம் - கட்டில் , (36) அங்கம் - உடல்உறுப்பு (37)அங்கலாய்ப்பு - கலக்கம் (38)அங்காடி - சந்தை (39)அங்கி -சட்டை (40)அங்குரம் -முளை (41)அசதி - சோர்வு (42)அசடு - குற்றம் (43)அசட்டை - பாராமுகம் (44)அசரீரி - உருவிலிவாக்கு (45)அசரீரி - வானொலி (46)அசலம் - மலை (47)அசுவமேதம் - குதிரை (48)அசுவமேதம் - வேள்வி (49)அசுவம் -குதிரை (50)அசுழம் -நாய் (50)அச்சம் -பயம் (51)அடி - பாதம் (52)அடிகோலுதல் - தொடங்குதல் (53)அடிசில் - உணவு (54)அடிச்சுவடு - காலடித்தடம் (55)அடியிடல் - தொடங்குதல் (56)அடியார் - தொண்டர் (57)அடுக்களை - சமையலறை (58)அடைக்கலம் - புகலிடம், (59) அடைக்கலம் - சரண்புகல் (60)அணங்கு - தெய்வப்பெண் (61)அடைக்கலம் - புகலிடம் (62)அடைக்கலம் - சரண்புகல் (63)அணங்கு - பெண்தெய்வம் (64) அணி - ஆபரணம் (65)அணை - அணைக்கட்டு (66)அண்மை - சமீபம் (67)அண்டம் - உலகம் (68)அண்டர் - தேவர் (69)அண்ணல் - சிறந்தோன் (70)அதிதி - விருந்தினர் (71)அதிபதி - தலைவன் (72)அத்தம் - ஆண்டு (73) அத்தம் - காடு (74)அத்திரம் -அம்பு (75)அதரம் - உதடு (76)அதர் - வழி (77)அதிகாரி - தலைவன் (78)அதிசயம் - புதுமை (79)அத்தாட்சி - சா ன்று (80)அநந்தம்- முடிவுற்றது (81)அநாதி - தோற்றமின்மை (82)அநாதை- திக்க ற்றவன் (83)அனுகூலம் - செயல் கைகூடல் (84)அனுக்கிரகம் - அருள் (85)அனுசரணை - இசைவு (86)அனுதாபம் - இரக்கம் (87)அந்தகன் - குருடன் (88)அந்தகாரம் -இருள் (89)அந்தகம் - முடிவு (90)அந்தரங்கம் - இரகசியம் (91)அந்தரங்கம் - மறைபொருள் (92)அந்தி - மாலைபொழுது (93)அபசாரம் - குற்றம் (94)அபயம் - அடைக்கலம் (95)அபரபக்கம் - தேய்பிறை (96)அபராதம் - தண்டனை (97)அபராதி - குற்றவாளி (98)அபாண்டம்- பழி (99)அபாயம் - ஆபத்து (100)அபிராமி - பார்வதி (101)அபிலாசை - விருப்பம் (102)அபூர்வம் - அருமை (103)அப்பு - நீர் (104)அமரர் - தேவர் (105)அமராவதி - இந்திரனுடைய நகரம் (106)அமர் - போர் (107)அமலன் - குற்றமற்றவன் (108)அமுது - சோறு (109)அமைதி - அடக்கம் (110)அம்பலம் - வெளி (111)அம்பலம் - மேடம் (112)அம்பி - தோணி (113)அம்பிகை - பார்வதி (114)அம்புயம் - தாமரை (115)அம்புலி - சந்திரன் (116)அம்மணம் - நிர்வாணம் (117)அம்மை - தாய் (118)அயனம் - பிறப்பு (119)அயில் - கூர்மை (120)அயில் - வேல் (121)அரங்கம் - சபை (122)அரசன் - மன்னன் (123)அரசிறை - கப்பம் (124)அரசு - அரசன் (125)அரசு - அரசியல் (126)அரணியம் - காடு (127)அரமியம் -நிலாமுற்றம் (128)அரம்பை -தெய்வப்பெண் (129)அரவிந்தம்-தாமரை (130)அரவு-பாம்பு (131)அரிச்சுவடி-அரிவரி (132)அரிச்சுவடு - ஏடு (133)அரி - வண்டு (134)அரி - சிங்கம் (135)அரினை - கள் (136)அரியணை -சிங்காசனம் (137)அருக்கன் -சூரியன் (138)அருங்கலம் - ஆபரணம் (139)அருணன் - கதிரோன் (140)அருணோதயம் -வைகறை (141)அருமை -ஆபூர்வம் (142)அரும்பல் -முளைத்தல் (143)அரும்பு - இளமீசை (144) அரும்பு - மொட்டு (145)அருவம் - உருவமற்றது (146)அருவர் - தமிழர் (147)அருவி - சிற்றாறு (148)அருள் - திருவருள் (149)அரை - பாதி (150)அரைஞான் - இடுப்புக்கயிறு (151)அர்ச்சித்தல் -வணங்குதல் (152)அர்த்தமண்டபம் - கருவறை (153)அர்ப்பணம் - ஒப்பிடுதல் (154)அலகு - நெல்மணி (155)அலகு - கூறு (156)அலகு - சொண்டு (157)அலகு - பிரிவு (158)அலகை - பேய் (159)அலக்கண் -துன்பம் (160)அலங்கல் - மாலை (161)அலங்கை - துளசி (162)அலங்கோலம் - அவலட்சணம் (163)அலமரல் -மனச்சுழற்சி (164)அலவன் - ஆண் நண்டு (165)அலவு - ஆண்பனை (166)அலுங்கு - எறும்புதின்னி (167)அல்குதல் -குறைதல் (168)அல்லங்காடி -அந்திச்சந்தை (169)அல்லல் - துன்பம் (170)அவகாசம் - காலக்கெடு (171)அவசம் - பரவசம் (172)அவதாரம் - பிறப்பு (173)அவதானம் -நிதானம் (174)அவதூறு - பழிச்சொல் (175)அவதூறு -நிந்தனை (176)அவயம் - உறுப்பு (177)அவயான் - பெருச்சாளி (178)அவரோகணம் - இறங்குதல் (179)அவலம் - துன்பம் (180)அவலம் - அழுகை (181)அவனி - உலகம் (182)அவா - மிக்கஆசை (183)அவா - பேராசை (184)ஆவி - வேள்விப்பொருள் (185)அவிச்சை - அஞ்ஞானம் (186)அவை - சபை (187)அவ்வை - தாய் ,தவப்பெண் (188)அழும் - பிணம் (189)அழுக்காறு - பொறாமை (190)அழுங்கு - ஆமை (191)அளகம் - கூந்தல் (192)அளக்கர் - கடல் (193)அளி - வண்டு (194)அளை - வளை (195)அளை - தயிர் (196)அறங்கடை - பாவம் (197)அறம் - தர்மம் (198)அறிகுறி - அடையாளம் (199)அறிஞர் - அறிவாளி (200)அறிவியல் - விஞ்ஞானம் (201)அறிவுரை - புத்திமதி (202)அறுதி - முடிவு (203)அறுதி -வரையறை (204)அறுதியிடல் - நிச்சயித்தல் (205)அறுபதம் -வண்டு (206)அறுமை - ஆறு (207)அறைகூவல் - போருக்கழைத்தல் (208)அறைபோதல்- வஞ்சனை செய்தல் (209)அற்கன் - சூரியன் ,கதிரவன் (210)அற்றம் -அச்சம் ,சோர்வு (211)அனந்தம் -அளவின்மை (212)அனவரதம் -எப்பொழுதும் (213)அனல் - தீ (214)அனுசாரம் - ஒழுக்கமின்மை (215)அனுகூலம் - காரியசித்தி (216)அனுக்கிரகம் - அருள் (217)அனுச்சை - விடை (218)அனுட்டானம் -நிலைநிறுத்தல் (219)அனுமதி - சம்மதம் (220)அன்பு - காதல் (221)அன்னதாழை - அன்னாசி (222)அன்னப்பால் - கஞ்சி (223)அன்னம் - சோறு (224)அன்னை - தாய் (225)அருக்கன்- பூமி (226) அம்புலி - சந்திரன் (227)அகலம் - மலை (228) அல்லல் - துன்பம் (229)அரவிந்தம் - தாமரை (230) அம்புயம் - தாமரை (231) அகங்காரம் - ஆணவம் (232) அநாதி - பழைமை (233) அநாதி - புராதானம் (234) அடவி - காடு (235)அழகு - எழில் (236)அழகு - மாட்சி (237)அழகு - வனப்பு (238) அரசன் - வேந்தன் (239)அடிசில் - ஆகாரம் (240) அக்கினி - தீ (241)அரவம் - பாம்பு (242)அகதி - ஏதிலி (243)அக்கினி நட்சத்திரம் - எரிநாள் (244)அங்கவஸ்திரம் - மேலாடை (245)அங்குலம் - விரலம் (246)அசரீரி - உருவிலி (247)அஞ்சலி - கும்பீடு, (248)அஞ்சலி - இறுதி வணக்கம் (249)அஞ்சலி - வணக்கம் (250)அத்தியாவசியம் - இன்றியமையாமை (251)அதிகாரபூர்வம் - அதிகாரச் சான்று (252)அதிசய மனிதர் - இறும்பூதாளர் (253)அதிர்ஷ்டம் - ஆகூழ் (254)அத்வைதம் – இரண்டன்மை (255)அநேக – பல (256)அநேகமாக - பெரும்பாலும் (257)அந்தரங்கம் - மர்மம் (258)அந்தரங்கம் -கமுக்கம் (259)அந்தரங்கம் -மறைமுகம் (260)அந்தஸ்து - தகுதி (261)அபயம் - அடைக்கலம் (262)அபாயம் - ஏதம், (263)அபாயம் - கேடு (264)அபராதம் - தண்டம் (265)அபாயம் - இடர் (266)அபிப்ராயம் - கருத்து, (267) அபிப்ராயம் - ஏடல் (268)அபிமானம் – நல்லெண்ணம் (269)அபிவிருத்தி – மிகுவளர்ச்சி (270)அபிஷேகம் – திருமுழுக்கு (271)அபூர்வம் – அருமை (272)அப்பியாசம் - பயிற்சி (273)அமரர் - நினைவில் உரை (274)அமரர் - காலஞ் சென்ற (275)அமாவாசை - காருவா (276)அமோகம் - மிகுதி (277)அரபிக்கடல் - குட கடல் (278)அராஜகம் - அரசின்மை (279)அர்ச்சகர் - வழிபாட்டாசான் (280)அர்ச்சகர் - பூசாரி (281)அர்த்தம் - பொருள் (282)அலட்சியம் - புறக்கணிப்பு (283)அவசகுனம் - தீக்குறி (284)அவசியம் – வேண்டியது, (285)அவசியம் - தேவை (286)அவதாரம் – தோற்றரவு (287)அவயவம் - உடலுறுப்பு (288)அற்புதம் - இறும்பூது, (289)அற்புதம் - நேர்த்தியான (290)அனுபல்லவி - துணைப் பல்லவி (291)அனுபவம் - பட்டறிவு (292)அனுபவித்தல் - நுகர்தல் (293)அனுமானம் – உய்த்துணர்வு (294)அனுஷ்டி – கடைபிடி, (295)அனுஷ்டி – கைக்கொள் (296)அன்னாசி – செந்தாழை (297)அன்னியம் – அயல் (298)அஸ்திவாரம் - அடிப்படை (299) அணல் - தாடி, கழுத்து (300) அனல் - நெருப்பு (301) அணி - அழகு (302) அனி - நெற்பொறி (303) அணு - நுண்மை (304) அனு - தாடை, அற்பம் (305) அணுக்கம் - அண்டை, (306)அணுக்கம் - அண்மை. (307) அனுக்கம் - வருத்தம், (308) அனுக்கம் - அச்சம் (309) அணை - படுக்கை, (310) அணை - அணைத்துக் கொள்ளுதல் (311) அனை - அன்னை, (312)அனை -மீன் (313)அணைய - சேர, (314)அணைய - அடைய (315)அனைய - அத்தகைய (316)அண்மை - அருகில் (317)அன்மை - தீமை, (318) அன்மை - அல்ல (319)அங்கண் - அவ்விடம் (320)அங்கன் - மகன் (321)அண்ணம் - மேல்வாய் (322)அன்னம் - சோறு, (323)அன்னம் -அன்னப்பறவை (324)அண்ணன் - தமையன் (325)அன்னன் - அத்தகையவன் (326)அவண் - அவ்வாறு' (327)அவன் - சேய்மைச் சுட்டு, (328)அவன் - ஆண்மகன்